அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

🕔 March 7, 2016

Transfer - 087– அப்துல் ஹமீட் –

க்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின் அயராத உழைப்பினால் அனைத்து நிலைகளிலும் பாடசாலை சிறந்து விளங்குகின்றது. விசேடமாக 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் இந்தப் பாடசாலையின் அடைவுகள் சிறந்த முறையில் உள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், இங்கு கற்பித்தல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டு வந்த சில ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக இடம்மாற்றப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செயற்பாடானது இப்பாடசாலையின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத அரசியல் பின்புலம் கொண்ட சிலரின் முயற்சி எனவும், இவ்வாறானவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இந்த இடமாற்றங்கள் நடைபெறுவதாகவும் பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர்.

எனவே, அந்-நூர் மகா வித்தியாலய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடமாற்றம் காரணமாக எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலை எதிர்நோக்குகின்ற பிரச்சிணைகளையும், பாதிப்புக்களையும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் பொறுப்பேற்க வெண்டும் எனவும் பெற்றொர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்