விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு

🕔 March 1, 2016

Monks release - 862நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிஸார் கடமைகளை மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் செல்வதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதி வழங்கியது.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த 26 ஆம் திகதி உத்தரவு பிறப்பித் போது, அதை எதிர்த்து நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் பௌத்த பிக்குகளும், பொதுமக்கள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் பொலிஸாரின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டில் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தகன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட 06 பௌத்த பிக்குகளும் 05 பொதுமக்களும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் ஒவ்வொருவரையும் தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க அனுமதி வழங்கினார்.

இந்த வழங்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்