பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்

🕔 February 18, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு Mahinda - 0523முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ஐ.ரி.என்) செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் இவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அப்போது வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்வின் தேர்தல் விளம்பரங்கள் சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தப்படாமல் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வாக்கு மூலங்களைப் பெறுவதற்காக, பாரிய மோசடிகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்