வட மாகாண ஆளுநராக ரெஜிரோல் கூரேயை நியமிப்பது குறித்து ஆட்சேபனையில்லை: சிவாஜிலிங்கம்

🕔 February 12, 2016

Sivajilinkam - 0123ட மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் கூரேயை அரசாங்கம் நியமிப்பது தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லையென, வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், ரெஜினோல்ட் கூரே – அனுபவம் வாய்ந்த ஓர் அரசியல்வாதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், வட மாகாணத்தின் ஆளுநராக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதையே, தாம் பெரிதும் விரும்புவதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் வட மாகாண ஆளுநர்களாக சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வந்தமையினையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தனிப்பட்ட ரீதியில், ரெஜினோல்ட் கூரேயை ஆளுநராக நியமிப்பது தொடர்பில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தப் பதவிக்கு தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதுதான் நல்லிணக்கத்துக்கான மற்றுமொரு படியாக அமையும்” என்று சிவாஜிலிங்கம் கூறினார்.

வட மாகாண ஆளுநராக தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டி வருகிறது என்று கேள்ளி எழுப்பியுள்ள மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ், முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படும் போது, ஏன் ஆளுநராக நியமிக்கப்பட முடியாது என்றும் வினவினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்