சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது; மனித உரிமைகள் கண்காணிப்பகம்

🕔 February 11, 2016
Brad Adams - 097ரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது, போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுத் தருமென, எதிர்பார்த்தோர் மத்தியில், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் (Brad Adams) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகாவின் நியமனமானது – பாரிய மனித உரிமைகளில் ஈடுபட்ட ராணுவ தலைவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கான சமிக்ஞை என்றும் அவர் கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நேர்மாறான விடயம் என்றும், இலங்கை அரசாங்கம் மக்களினதும் ஐக்கிய நாடுகளினதும் நியாயமான கோரிக்கைகளை வெள்ளையடிப்பு செய்துவிடக்கூடாது என்றும் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தவர்கள் மத்தியில், சரத் பொன்சேகாவின் நியமனமானது  நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் கிடைக்கும் என்று நம்பியிருந்த உலக தலைவர்களுக்கு வழங்கியுள்ள அவதானமிக்க செய்தியாகும் என்றும் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்