மரமேறும், உலகில் மிகப் பெரிய நண்டுகள் (படங்கள் இணைப்பு)

🕔 February 6, 2016

Crab - 01
லகிலேயே மிகப் பெரிய நண்டுகள் என அறியப்படுகின்றவை, மிக வேகமாக அழிவடைந்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.

உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த நண்டு இனங்களை, அவுஸ்ரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்மஸ் தீவில் ஓரளவு காணக்கிடைக்கிறது.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள காடுகளில் உலகில் மிகப் பெரிய இந்த நண்டுகள் காணப்படுகின்றன. நான்கு கிலோ எடையுடன் சுமார் 03 அடி நீளம் வரை வளரக் கூடிய  இந்த வகை நண்டுகள், 60 ஆண்டுகள் வாழக் கூடியவை என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியாகும்.

தண்ணீரை விடவும் நிலத்திலுள்ள பொந்துகளிலேயே இவை அதிகம் வாழுகின்றன.

ஒரு காலத்தில் அதிகமாகக் காணப்பட்ட இந்த நண்டு இனமானது, தற்போது சடுதியாக அழிவடைந்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உணவுக்காக இந்த நண்டுகள் வேட்டையாடப்படுகின்றன. மேலும், இந்த நண்டுகளை உண்பதால் பாலுணர்வு அதிகரிப்பதாகக் கூறப்படுவதால், அந்த நோக்கத்துக்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

எனவே, இந்த நண்டுகளை வேட்டையாடுகின்றவர்களுக்கு கிறிஸ்மத்தீவில் 4000 அமெரிக்க டொலர் வரை தண்டம் விதிக்கப்படுகிறது. இலங்கை நாணயத்தில் இந்தத் தொகையானது 05 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

உலகில் மிகப் பெரிய இனமான இந்த நண்டுகள் – தமது உணவாக எலிகள், பழங்கள், இறந்த மிருகங்கள், நண்டுகள், தானியங்கள் மற்றும் தேங்காய்களை உட்கொள்கின்றன.

தென்னை மரங்களில் இந்த நண்டுகள் மிக லாவகமாக ஏறி, தேங்காய்களை பறித்து உண்ணுகின்றன என்றால், சாதாரணமாக அதை நம்புவது கடிம்தான். என்றாலும் அதுதான் உண்மை.

மட்டுமன்றி, இந்த நண்டுகள் ஒரு தேங்காயை உருட்டிக் செல்லுமளவுக்கு வல்லமை வாய்ந்தவையாகும். Crab - 03Crab - 04Crab - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்