‘அறபுப் பாடம் கற்பித்தல்’ தொடர்பிலான கருத்தரங்கை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்

🕔 June 5, 2015

அறபு கருத்தரங்கு - 001– அஸ்ரப் ஏ. சமத் –

றப்புப் பாடம் கற்பித்தல் தொடர்பிலும், அதன் முறைகள் பற்றியும்  05 நாள் வதிவிடக் கருத்தரங்கினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமொன்று, நேற்று வியாழக்கிழமை தெமட்டகொட பகுதியில் நடைபெற்றது.

‘அனைவருக்கும் அறப்புப் பாடம் எவ்வாறு கற்பித்தல்’ என்பது தொடர்பிலும், அதன் முறைகள் பற்றியும் – நாட்டின் பல பாகத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மெளலவிமார்களுக்கு  05 நாள் வதிவிடக் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. தெமட்டக்கொடயில் உள்ள – உலக கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி பயிற்சி நிறுவனம் – இந்தக் கருத்தங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

சஊதி அரேபியாவின் காலித் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த – கலாநிதி சாலிஹ் அல் சக்ரஹ் மற்றும் இமாம் பல்கலைக் கழகத்தின் அப்துல்லாஹ் ஆகியோர் – குறித்த கருத்தரங்கினை வெற்றிகரமாக நடத்தினர்.

அந்த வகையில், மேற்படி கருத்தரங்கினை பூர்த்தி செய்தவர்களுக்கு நேற்றைய நிகழ்வில் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதன்போது, பல்கலைக் கழகங்களில் அறபு மொழியில் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மௌலவி லத்தீப் நவ்பர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக் பிரதம அதிதியாகவும்,  ஜம்மியத்துல் உலாம சபையின் செயலாளர் அஷ்ஷேக் முபாரக் மொளலவி, உப தலைவர் கலீல் மொளலவி,  விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பைரூஸ் உள்ளிட்டோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.அறபு கருத்தரங்கு - 003அறபு கருத்தரங்கு - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்