அமைச்சர் ஹக்கீம் துருக்கி செல்கிறார்

🕔 February 2, 2016
Hakeem - 0973– ஷபீக் ஹுஸைன் –

கர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நாளை புதன்கிழமை துருக்கி நாட்டுக்கு செல்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், அமைச்சர் ஹக்கீம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.

இவ்விஜயத்தின்போது, துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகான் உட்பட அரசியல் பிரமுகர்களை அமைச்சர்  ஹக்கீம் சந்திக்கவுள்ளார்.

மேலும் தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்றம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு துருக்கி நாட்டினுடைய ஒத்துழைப்பையும் இவ்விஜயத்தின் போது அமைச்சர் கோரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் வலுவான  யோசனைகளை தயாரிப்பது குறித்து கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம், அங்கிருந்தவாறு துருக்கி நாட்டுக்கு பயணமாகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்