யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 January 30, 2016

Yositha arrest - 01121
மு
ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோசித ராஜபக்ஷ நீதிமன்றத்துகு கொண்டுவரப்பட்டமையினை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் சிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்துக்கு முன்னால் வருகை தந்திருந்தனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், யோசித கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

சி.எஸ்.என். ஊடக நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பிலேயே யோசித ராஜபக்ஷ விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யோசித ராஜபக்ஷ, சி.எஸ்.என். நிறுவனத்தின் உரிமையாளராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்