ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

🕔 January 29, 2016
Mahinda - 0134முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே,  அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள் கட்டணம் செலுத்தப்படாமல் ஒளிபரப்பாகியிருந்ததாகவும், இதனால், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்