அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

🕔 January 28, 2016

Gnanasara - 0143பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையினை அடுத்து, அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஞானசார தேரர் தரப்பில் சட்டத்தரணி சுமுது கந்த ஹேவாகே, இன்று வியாழக்கிழமை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பிணை கோரும் மனுவினைத் தாக்கல் செய்தார்.

ஆயினும் இந்த மனுவினை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்