ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை

🕔 January 27, 2016

Transparency - logo - 01– மப்றூக் –

லகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், இலங்கைக்கு மேற்படி இடம் கிடைத்துள்ளது.

168 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியபோதே, இலங்கை 83ஆவது இடத்தினைப் பிடித்துள்ளது.

சீனா, லைபீரியா,கொலம்பியா மற்றும் பெனின் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இலங்கைக்கு நிகரான புள்ளிகளைப் பெற்று, 83 ஆவது இடத்தினைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஊழல் தொடர்பில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை புலனாகிறது.

2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகில் ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு 85ஆவது இடம் கிடைத்திருந்தது.

ஆயினும், 2014 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சமனாக இருந்த (85ஆவது இடம்) இந்தியா, இம்முறை முன்னேறி, 76 ஆவது இடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் நோக்கும் போது, 2015 ஆம் ஆண்டு இந்தியாவை விடவும் இலங்கை, ஊழல் மிகுந்த நாடாக இருந்துள்ளது.

மேற்படி பட்டியலில் ஊழலற்ற அல்லது மிகவும் குறைந்த நாடாக (01ஆம் இடம்) டென்மார்க் உள்ளது. அதேவேளை, பின்லாந்து 02 ஆம் இடத்தினையும், சுவீடன் 03 ஆவது இடத்தினையும் பிடித்துள்ளன.

உலகில் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளாக  2015 ஆம் ஆண்டு வடகொரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இருந்துள்ளன. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ வெளியிட்டுள்ள குறித்த பட்டியலில் மேற்படி நாடுகள் இரண்டும் 167 ஆவது இடத்தினைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்