முஸ்லிம் பெண்கள் முகம் காட்ட வேண்டும்; இங்கிலாந்து பிரதமர் கோரிக்கை

🕔 January 20, 2016

David cameron - 086முகத்தை மூடி ஆடை அணியும் முஸ்லிம் பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்கள் முகத்தைக் காட்ட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

“முகத்தை மூடும் முஸ்லிம் பெண்கள்,  தங்களது முகத்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காட்டி உதவி புரிய வேண்டும். தீவிரவாதத்தை சமாளிக்கும் நமது முயற்சிக்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்.

நீதிமன்றங்கள் மற்றும் குடியேற்ற சோதனை மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இதனைக் கடைபிடியுங்கள். மேலும், இங்கிலாந்திலுள்ள முஸ்லிம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடையை சுதந்திரமாக அணியலாம். ஆடை சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது” என்றார்.

முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 28 மில்லியன் டொலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்வதாக, அந்த நாட்டு அரசு அறிவித்தது.

இங்கிலாந்தில் உள்ள 1,90,000 முஸ்லிம் பெண்கள் குறைந்த ஆங்கிலத்தில் குறைவான அறிவினையோ, அல்லது முழுமையாக ஆங்கிலம் தெரியாமலோ இருக்கின்றனர் என்றுஅந்நாட்டு அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேலும், ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளாத முஸ்லிம் பெண்களுக்கான குடியிரிமையை நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்