க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

🕔 January 17, 2016
OL Exame - 0124
ல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் முதல், சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய திட்டத்தின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக கட்டாயப்படுத்தப்பட்ட 06 பாடங்களையும் மாணவர்களே தெரிவு செய்ய முடியும்.

அவ்வாறு தெரிவு செய்யப்படும் பாடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார மேலும் கூறியுள்ளார்.

மாணவர்களின் நன்மை கருதியே 06 அல்லது 07 பாடங்களாக குறைத்துள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்