மாகாணசபை உறுப்பினர் ஜவாத், முன்பள்ளி மற்றும் நூலகத்தினை ஆரம்பித்து வைத்தார்

🕔 January 16, 2016

Jawad - 013
– எம்.வை. அமீர் –

ல்முனை ‘கிறீன்பீல்ட்’ கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்முனை நகர் பள்ளிவாசலின் தலைவருமான கே.எம். ஜவாத், அங்கு முன்பள்ளி மற்றும் பொது நூலகம் ஆகியவற்றினை ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, கிறீன்பீல்ட் கிராமத்தில் அமைந்துள்ள றோயல் வித்தியாலயத்தில் கல்வி கற்று, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்விலும் மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதியாக் கலந்து கொண்டார்.

கிறீன்பீல்ட் முகாமைத்துவ அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எல்.எம். ஹபூல் ஆஸாத் தலைமையில் மேற்படி மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுகளில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. றஹீம், முன்பள்ளிகளுக்கான பிரதிகல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். சக்கப், றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். அன்சார், சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைசால் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா  உட்பட கிறீன்பீல்ட் முகாமைத்துவ அமைப்பின் செயலாளர் ரீ.ஆர். அப்துர்ரஹுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், முன்பள்ளி கல்வி நிலையத்துக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனைப் பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தினை உள்ளடக்கி, கிறீன் பீல்ட் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Jawad - 015Jawad - 017Jawad - 016

Comments

புதிது பேஸ்புக் பக்கம்