ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி

🕔 June 1, 2015

Protest - Alayadivembu - 01– வி.சுகிர்தகுமார் –

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சார நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இடம்பெற்றது.

நீதியை நோக்கிய பணம் எனும் தொனிப் பொருளில் நாடு தழுவிய ரீதியில் – இன்று திங்கட்கிழமை மேற்படி பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி பிரசார நடவடிக்கையினை அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினர்  ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் – பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், மகாசக்தி, களம், கிராம அபிவிருத்தி சங்கங்கள்  உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பெண்களுடன் ஆண்களும் இணைந்து  கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தினையும், எதிர்பையும் வெளியிட்டனர்.

அக்கரைப்பற்று சந்தை சதுக்க சுற்றுவட்டாரத்தில் ஒன்று கூடியவர்கள், பல்வேறு பட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

இதன்போது, மாணவி வித்தியா மீதான படுகொலைக்கு காரணமானவர்களுக்கு, அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.Protest - Alayadivembu - 02Protest - Alayadivembu - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்