ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை

🕔 January 10, 2016
Blue sapphire - 01உலகிலேயே பெரியது என நம்பப்படும் நீல நிற இரத்தினக்கல்லினை நாட்டிலிருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீல நிற இரத்தினக்கல் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த நீலக்கல்லின் பெறுமதியை நிர்ணயிக்க முடியாதுள்ளதாக, அதனை ஆய்வுசெய்த கொழும்பு இரத்தினக்கல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் அதன் உரிமையாளரான இலங்கையர், அதனை 04 ஆயிரத்து இருநூறு கோடி ரூபாவுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அவர் அதற்கு ‘இலங்கையின் ஆதாம் நட்சத்திரம்’ என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்வததைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இரத்தினக்கற்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்