கிழக்கு மாகாணசபையில் அமளிதுமளி; எதிரணி உறுப்பினர்கள் வெளிநடப்பு

🕔 November 24, 2015
Shibly farook - 098
கி
ழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை, எந்தவித அறிவித்தலுமின்றி மீளப் பெற்றுக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவசர பிரேரணையொன்றினை ஆளும் தரப்பு உறுப்பினர் சிப்லி பாறூக் இன்று செவ்வாய்கிழமை சபையில் முன்வைத்தார்.

மீளப் பெறப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மீண்டும் நியக்குமாறும், சிப்லி பாறூக் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணசபையின் 47வது அமர்வு, இன்று காலை 9.45 மணிக்கு சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலமையில் ஆரம்பமானது.

அதன்போது ஆளும்தரப்பைச் சேர்ந்த 23 உறுப்பினர்களும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த 08 உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.

உறுப்பினர் சிப்லி பாறூக் முன்வைத்த பிரேரணை தொடர்பில், எதிரணி உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கருத்துத் தெரிவிக்கையில்; சபையின் நுழைவாயில் காவலாளிகளிடம், எமது அடையாள அட்டையினை காண்பித்த பின்னரே, இன்று காலை சபையினுள் பிரவேசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமக்கு ஏற்பட்டதாகக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கருத்து தெரிவிக்க முட்பட்ட வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் மஞ்சுள பெணான்டோ, முதலமைச்சரை இறுதியில் உரை நிகழ்த்துமாறு  கோரியதோடு, சக உறுப்பினர்களுக்கும் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். இதனால், சபையில் குழப்பநிலை நிலை நிலவியது.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்