நாளைய வரவு – செலவுத் திட்டத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படுமா; அமைச்சர் அமுனுகம பதில் வழங்குகிறார்

🕔 November 19, 2015

Fuel -012புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை வெள்ளிக்கிழமை பிற்கபல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், நல்லாட்சியின் பிரதிபலனாக பல முக்கிய அனுகூலங்களை வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என்று, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் நீண்ட கால நோக்குடன் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக எரிபொருள் விலைகள் குறைக் கப்படுமா என்பது குறித்து கூற முடியாது என்றும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் உச்ச நன்மையை பொதுமக்களுக்கு வழங்குவதென அரசாங்கம் கொள்கை ரீதியில் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், புதிய அரசாங்கங்கமானது ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள் விலையினை வெகுவாகக் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்