நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

🕔 November 18, 2015
Cabinet - 012னாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை ரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி, அதனை நாடாளுமன்றத்துக்கு வழங்குதல், மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்