மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

🕔 November 13, 2015
Mahinda - 0134முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழ இந்த உத்தரவினை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரசார கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அரச பேருந்துகளுக்கான 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே மேற்படி 07 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

142 மில்லியன் கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் பிரதிவாதிகள் பொறுப்பு கூற வேண்டும் என்றும், இதன்காரணமாக அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான அறிவித்தலை பிறப்பிக்குமாறும் முறைப்பாட்டு தரப்பான இலங்கை போக்குவரத்து சபை அண்மையில் நீதிமன்றத்தை கோரியிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான தீர்ப்பை இன்று வரை ஒத்தி வைத்த நீதிபதி, இன்றைய தினம் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு மார்ச் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எழுத்து கொள்ளப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்