மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

🕔 November 8, 2015
Flood - 222– எம்.ஐ.எம். நாளீர் –

ம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்புப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக – அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் – குறிப்பிட்ட மணிநேரம் பெய்த இந்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வந்த மழை, சில நாட்களாக தணிந்து, சீரான காலநிலை நிலவி வந்தது.

இந்த நிலையில், கடந்த சில மணி நேரம் பெய்த கடும் மழையினால் பிரதான வீதிகள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளமையினால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, தற்போது அம்மாறை மாவட்டத்தில் நெற் செய்கை விதைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த மழையினால், விவசாய நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.
Flood - 111Flood - 333

Comments

புதிது பேஸ்புக் பக்கம்