உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

🕔 May 31, 2015

German national flagலகில் குறைந்தளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பான் இருந்து வந்தது.

ஜேர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 என்கிற வீதத்தில் குழந்தை  பிறப்பு வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து வருகிறது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனும் அளவிலேயே உள்ளது.

இதேவேளை, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்து வருகிவதாகக் கூறப்படுகிறது. போர் த்துக்கலின் பிறப்பு வீதம் 09 ஆகும். இத்தாலியில்  9.3 ஆக உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிறப்பு வீதம் 13 எனும் அளவில் உள்ளது.

இந்த நிலையில், ஜேர்மனியில் வயது வந்தோரின் தொகை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 20 முதல் 65 வயதுக்குட்பட்டோரின் தொகை மொத்த சனத் தொகையில்  61 சதவீதமாக உள்ளது , ஆயினும் 2030 ஆம் ஆண்டுளவில் வயது வந்தோரின் தொகையானது 54 சதவீதமாக குறைந்துவிடும் என்று ‘ஹாம்பர் இன்ஸ்டிடுயூட் ஆப் இன்டர்னேஷனல் எக்கனாமிக்ஸ்’ எச்சரித்துள்ளது.

ஜேர்மனிய அரசானது , குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு அதிகளவு  சலுகைகளை வழங்கி  வந்தபோதிலும், அங்கே மக்கள் தொகை குறைந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்