கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு

🕔 November 2, 2015

Sahithya vila - 096– க. கிஷாந்தன் –

த்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு  ஆத்மஜோதி நா. முத்தையா அரங்கமாக பெயர் சூட்டப்பட்டு டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெ்றது.

இன்றைய அமர்வுகளுக்கு மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஷ்வரன் தலைமை தாங்கினார்.

முதல் அமர்வில் –  தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது, சாகித்திய விழாவின் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

இந்த வைபவத்தில் மத்திய மாகாண சபை உபதலைவர் ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மலையக தோட்டப்பகுதி மக்களின் பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. கலாநிதி. ஆறு. திருமுருகனின் உரை, இந்த அரங்கில் சிறப்புப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து இலக்கியகர்த்தா சாரல் நாடனின் அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக அவரது குடும்ப உறவினர்களால் அன்னாரின் உருவப்படம் திரை நீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு சான்றோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன இடம்பெற்றன.

ஹட்டன் மாநகரில் நேற்று கோலகலமாக ஆரம்பமான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகளுடன் இனிதே நிறைவடைந்தது.

தொடர்பான செய்தி: மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்
Sahithya vila - 091Sahithya vila - 098Sahithya vila - 097Sahithya vila - 094

Comments

புதிது பேஸ்புக் பக்கம்