யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

🕔 November 1, 2015
Sarath fonseka - 0123னாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று, அந்த நிலக்கீழ் மாளிகையில், பாதுகாப்புப் பிரிவுக் கூட்டம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மேற்படி நிலக்கீழ் மாளிகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

“குறித்த காலப்பகுதிகளில் நான் பாதுகாப்பு சபைக் கூட்டங்களுக்குச் சென்றால் எப்போதாவதுதான் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பேன்.

இதன் போது குறித்த நிலக்கீழ் மாளிகை அமைத்தல் தொடர்பில் சில பேச்சுகள் இருந்தன. எனினும் எங்கு, யார், என்ன கட்டப்போகின்றார்கள் என்பது தொடர்பில் எதுவும் நாங்கள் அறிந்திருக்கவில்லை.

எதிரிகளின் விமானங்கள் தாக்குவதற்கு வந்த போது, நிலக்கீழ் மாளிகை இன்னும் கட்டப்படவில்லையா? ராணுவத்தினர் மூலம் அதன் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவா? என்று நான் பல முறை கேட்டேன்.

எனினும், அது தொடர்பில் அவர்கள் அதிக விருப்பம் காட்டவில்லை. இந்த நிலக்கீழ் மாளிகை என்னவென்று தற்போதுதான் தெரிகின்றது” என்றார்.

மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது; போர் இடம்பெற்ற காலப்பகுதியில், ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியிலுள்ள மாளிகையில்தான் பாதுகாப்பு கூட்டங்கள் இடம்பெற்றிருந்தாகக் குறிப்பிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்