மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

🕔 November 1, 2015
Mahinda - 053னாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலக்கீழ் மாளிகையை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் நடவடிக்கைள் அரைவாசியுடன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்ற தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த நிலக்கீழ் மாளிகைக்கு, இரண்டு தடவைகள் மாத்திரமே தான் சென்றதாகக் கூறியுள்ளார்.

எனினும் குறித்த மாளிகையானது, மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோசித்த ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்தாகவும், இங்கு அவர்களின் ரக்பி வீரர்களான நண்பர்கள் அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெரும்பாலும் அலரி மாளிகையிலேயே வசித்து வந்தார். இந்தநிலையில் அவர் ஏன் இந்த நிலக்கீழ் மாளிகையை நிர்மாணித்தார் என்கிற கேள்களும் உள்ளன.

இந்த நிலக்கீழ் நிர்மாணப்பணிகள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் மாலை வேளையிலேயே இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்