வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர்

🕔 October 29, 2015

– அஸ்ரப் ஏ. சமத் –

டக்கிலிருந்து இடம்பெயா்ந்த சகல மக்களையும்  மீளக்குடியேற்றுவதற்குரிய காத்திரமானதொரு பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.


யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் அங்கு ராணுவத்தினரோ, கடற்படையினரோ பாதுகாப்பு வலயம் என்ற போா்வையில் அப்பாவி மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்காமல், அவற்றினை  மீளக் கையளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா, ஆங்கில மொழி முலம் எழுதிய ‘மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும்’ எனும் தலைப்பிலான நுால், நேற்று புதன்கிழமை கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கிலுள்ள அப்பாவி மக்களின் காணிகளை அப் பிரதேச அரசியல்வாதிகள் வெளிநாட்டவா்களுக்கு உல்லாச ஹோட்டல்கள் கட்டுவதற்காக பயண்படுத்துகின்றனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னா், முன்னாள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரே, பாதுகாப்பு படையினூடாக காணிகளை அபகரித்தாா்.

பேராசிரியா் ஹஸ்புல்லாவின் நூலின் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப, யுத்தம் முடிவடைந்த நிலையில், அம்மக்கள் மீளக் குடியமாத்தப்படல் வேண்டும் என்ற  நிலைப்பாட்டினை, எமது கட்சி முழுமையாக ஆதரிக்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்