மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

🕔 April 14, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய ரூபவாஹினி ஆகிய இரண்டு அரச நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிப்பது குறித்து பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்க, கபீர் ஹாசீம் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்திக்க சென்றுள்ளனர். இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸவும்  பிரத்தியேகமாக, சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சித் தலைவரும், தவிசாளரும் ஜனாதிபதியைச் சந்திக்க வந்திருந்தபோதிலும், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, உடனடியாக அங்கிருந்து சஜித் பிரேமதாச செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாசவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது இதன்மூலம் தெளிவாகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தனக்குத் தேவையான சில முனைப்புக்களை மேற்கொள்ளவே இந்த தொடர்புகளை சஜித் பிரேமதாஸ வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

(நன்றி: LNW)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்