நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

🕔 April 13, 2019

– அஹமட் –

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின் மேலால் கொண்டு சென்றுள்ளமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு வடக்கிலுள்ள வீதியிலேயே, குழாயை நிலத்தில் புதைக்காமல் நிலத்தின் மேலால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் குறித்து, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலய  முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீமிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது; “நீரிணைப்புக்கான குழய்களை, நிலத்தில் ஆகக் குறைந்தது 02 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும்” என்றும், “நிலத்தில் புதைக்காமல் – மேலால் குழாய்களைக் கொண்டு செல்ல முடியாது” எனவும் தெரிவித்தார்.

எனவே, தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினுடய விதிகளுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் தெரிவிப்போர் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயப் பொறுப்பாளராக யூ.எல்.சி. பாவா கடமையாற்றுகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்