1200 கிலோகிராம் போதைப் பொருள், அழிக்கப்படவுள்ளது

🕔 March 20, 2019

நாட்டில் பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய 1,200 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கை, எதிரவரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளரும் விசேட வைத்திய அதிகாரியுமான சமந்த கித்தலவல ஆராய்ச்சி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனைக் கூறினார்.

“கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமான பணிகளில், 10ஆயிரம் வரையான ஊழியர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர். அதில் நூறுக்கு 80 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பொன்றில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த ஊழியர்களில் அதிமானோர், போதைப் பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்