அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர், அரசியல்வாதிகளை திருப்திப்படும் வகையில் நடக்கிறார்: மக்கள் குற்றச்சாட்டு

🕔 March 14, 2019

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், உள்ளுர் அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டப்படுகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 04 வருட – வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை மக்களிடமிருந்து பெற்று தயாரிக்கும் பொருட்டு நடத்தப்படவுள்ள அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடலை,  அந்த வட்டாரத்துக்கு வெளியில் ஏற்பாடு செய்துள்ளதன் மூலம், உள்ளுர் அரசியல்வாதிகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் திருப்திப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளுராட்சி மன்றங்களின் 04 வருட வட்டார அபிவிருத்தி தொடர்பான திட்டங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்டாளைச்சேனையிலுள்ள வட்டாரங்களின் அபிவிருத்தி தொடர்பான திட்டத்தை, மக்களிடம் இருந்து பெற்று நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அபிவிருத்தி தொடர்பாக திட்டங்களைத் தயாரிக்கும் போது, மக்களுடன் கலந்துரையாடாமல், வட்டார மக்களை புறக்கணிப்புச் செய்வதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அறபா வட்டாரத்தில் அறபா வித்தியாலம், அந்நூர் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகள் இருக்கும் நிலையில், வேறொரு வட்டாரத்திலுள்ள அல்முனீரா பெண்கள் உயர்தரப் பாரடசாலையில் நாளை வெள்ளிக்கிழமை 4.00மணிக்கு, அறபா வட்டாரத்துக்கான கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அறபா வட்டார மக்களுடனான கலந்துரையாடலை, பிறிதொரு வட்டாரத்தில் நடத்தப்படுவதன் நோக்கம் என்னவென்று மக்கள்  கேட்கின்றனர்.

குறித்த வட்டாரத்துக்கான கலந்துரையாடல் நிகழ்வை, அந்த வட்டாரத்துக்கு வெளியிலுள்ள பிரிதொரு பாடசாலையில் நடத்துவதன் ஊடாக, உள்ளுர் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைச் செயலாளர் நடந்து கொள்வது விசனத்துக்குரியது என்றும் அங்குள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றர்.

வட்டாரங்கள் பிரிக்கப்பட்டதும், உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார ரீதியாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதும், அபிவிருத்தி திட்டங்களை மக்களின் காலடிக்குச் கொண்டு செல்வதற்கே ஆகும்.

ஆனால் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயற்பாடுகள் அதற்கு முரணாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே அறபா வட்டாரத்துக்கான மேற்படி கலந்துரையாடலை, அவ்வட்டாரத்திலுள்ள பொது நிறுவனமொன்றில் நடத்தி, அங்குள்ள மக்களின் கருத்துக்களை கேட்றிவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறு வட்டார மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்