சாய்ந்தமருதுடனான உறவு பாதிக்காது; தனது வாகனம் மீதான தால்குதல் குறித்து, ஆரிப் சம்சுதீன் கருத்து

🕔 March 11, 2019
“அரசியல் காரணங்களுக்காக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் எனது வாகனத்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற உறவினை ஒருபோதும் பாதிக்காது” என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் வைத்து தனது வாகனம் தாக்கப்பட்டது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் பிர்தௌஸின் தாயாரின் வீட்டில் கட்சியின் வட்டாரக் கிளைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நான் சமூகமளித்தபோது, பிழையாக வழிநடத்தப்பட்ட சில இளைஞர்கள் கூட்டத்தைக் குழப்பிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் எனது வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் எனது வாகனத்தின் பின் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.

ஒருபக்கம் இனவாதத்தாலும் மறுபக்கம் பிரதேசவாதத்தினாலும் அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கின்ற கல்முனையின் அடையாளம், இன்னும் சில காலங்களுக்காவது பாதுகாக்கப்படவேண்டும் என்ற நல்லெண்ணங்களுடன் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எனது பயணத்தில் இவ்வாறான நிகழ்வுகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

கல்முனையின் அடையாளமும் முஸ்லிம் தேசியத்தின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்த விடயங்களாகும். இளைஞர் சமுயதாயத்தை பிழையாக வழிநடத்துபவர்கள் எவ்விதமான போர்வையில் இருந்தபோதும், சமூகமும் எதிர்காலமும் அவர்களை திட்டவட்டமாக சரியாக கணிக்கும் என்றும், ஆரிப் சம்சுதீன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கார் மீது, சாய்ந்தமருதில் தாக்குதல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்