‘நீர் வெறுப்பு நோய்’ விழிப்புணர்வு கருத்தரங்கு

🕔 September 29, 2015
Rabies - 02– பழுலுல்லாஹ் பர்ஹான் –

லகளாவிய ரீதியில் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும், ‘நீர் வெறுப்பு நோய்’ (விசர் நாய்க்கடி நோய் -Rabies)  தினத்தையொட்டி, காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கான ‘நீர் வெறுப்பு நோய்’ பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அந்நாஸர் வித்தியாலய அதிபர் எம்.ஏ. அல்லா பிச்சை தலைமையில் இடம்பெற்ற மேற்படி கருத்தரங்கில், காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி டொக்டர் டுஜித்திரா லிங்கேஸ்வரன் விஷேட அதிதியாக கலந்து கொண்டு விசர்நாய்க்கடி நோய் தொடர்பில் கருத்துரை வழங்கினார்.

மேலும், இக் கருத்தரங்கில், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல். நஸீர்தீன் அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் காத்தான்குடி பிரதேச சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்