முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

🕔 February 24, 2019

– மப்றூக் –

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது.

பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று ‘பேஸ்புக்’கில் பரவி வந்தது.

இதனையடுத்து, மாணவிகள்மீது பகிடிவதை மேற்கொள்ளப்பட்டமைக்கு ஒருபுறம் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, ‘முஸ்லிம் மாணவிகள் மீது பகிடிவதை’ எனக் கூறி, இந்த விடயத்தை – இனரீதியானதொரு விடயமாகவும் சிலர் பிரசாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளும் பொருட்டு, ‘புதிது’ செய்தித்தளம் குறித்த விடயம் தொடர்பில் தேடலைத் தொடங்கியது.

இதன்போது, அனைத்து இன மாணவர்கள் மீதும் பகிடிவதை மேற்கொள்ளப்பட்ட போதிலும், முஸ்லிம் மாணவிகள் மீது – பகிடிவதை நடத்தப்பட்ட காட்சிகளை மட்டும் தெரிவு செய்து, அதனை யாரோ ‘பேஸ்புக்’கில் பரவ விட்டமையை கண்டறிய முடிந்தது.

இதனையடுத்து ஏனைய இன மாணவர்கள் மீதும், அந்தத் தருணத்தில் பகிடிவதை நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவினை ‘புதிது’ செய்தித்தளம் கைவசப்படுத்தியதோடு, அதனை இங்கு வெளியிடுகிறது.

மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், இந்த விடயத்தை இனரீதியாக பிரசாரம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

தொடர்பான செய்தி: கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்