கலாபூசணம் ஆதம்பாவா எழுதிய, ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ நூல் வெளியீடு

🕔 September 28, 2015

Book release - 0004
– அஸ்ஹர் இப்றாஹிம் –

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொலைக்கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாபபூசணம்  எம்.எம். ஆதம்பாவா எழுதிய ‘குழந்தைகள் வெள்ளைக் காகிதங்கள்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, இன்று திங்கட்கிழமை, சாய்ந்தமருது பரடைஸ்  மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூசணம் ஏ. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, நூலை வெளியிட்டு வைத்தார்.

இவ் விழாவில் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ. றயீஸா ஹஸ்மத் வெளியீட்டு உரையினையும் , கவிஞர் நவாஸ் சௌபி நூல் அறிமுகத்தினையும் , கலாபூசணம் யூ.எல். ஆதம்பாவா  நூலாசிரியர் குறிப்பினையும் வழங்கினர்.

மேலும், மணிப்புலவர்  மருதூர் ஏ மஜீட்,  தென்கிழக்குப்  பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.

நூலின் முதற் பிரதியினை நூலாசிரியரின் பாரியார்  என்.எம்.நூறுல் நஜீமாவிற்கு பிரதம அதிதி சட்டத்தரணிஆரிப் சம்சுதீன் வழங்கி வைத்தார்.Book release - 0001Book release - 0002Book release - 0003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்