புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

🕔 February 14, 2019

தூக்கு மேடைக்குப் பயன்படுத்தும் கயிறை இறக்குமதி செய்வதற்கான செயன்முறைக்கு உதவுமாறு, வெளிவிவகார அமைச்சிடம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதுள்ள தூக்குக் கயிறு, 12 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் அன்பளிப்பாக வழங்கியதென,  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சுக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு எழுதிய கடிதத்தில்; தூக்குக் கயிறை கொள்வனவு செய்வதற்கு பாகிஸ்தான், இந்தியா, சிங்கப்பூர் அல்லது பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலொன்றை சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments