வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் கடனை, அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானம்

🕔 February 13, 2019

றட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பெற்று கொண்ட கடனை மீளவும் பெற்றுக்கொள்ளாமலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபா கடன் நீக்கம் செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் 45 ஆயிரத்து 139 பெண்கள் நன்மையடையவார்கள் என்றும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பெண்கள் பெற்று கொண்ட கடனை, அவர்கள் கடன் பெற்றுக் கொண்ட நிறுவனங்களுக்கு, அரசாங்கம் மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 300 பேருக்கு கடனிலிருந்து விடுதலை பெற்றதற்கான உறுதிபத்திரம் நாளை வியாழக்கிழமை பிரதமர் வழங்கி வைப்பார்.

Comments