தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

🕔 February 5, 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து ஐ.தே.கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் வாக்களித்தால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

“அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும். ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு தேவையேற்படின் அதன் எண்ணிக்கையை 45 வரை அதிகரிக்க முடியும்.

இற்காகவே அவர்கள் தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தேசிய அரசமைக்கும் முயற்சியை கைவிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அவர்கள் அரசாங்கத்தை அமைக்கலாம். எனினும் அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்