உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

🕔 September 25, 2015

Tourism - 0002
லக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது.

வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது.

மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம் இன்று காலை, பொத்துவில் – அறுகம்பே பாலத்துக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஷர்ரப், சட்டத்தரணி ஏ.எல். ஆதம்லெப்பை, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

உலகிலுள்ள புகழ்பெற்ற 10 சேர்பிங் தளங்களில் ஒன்றாகவும், பிரபல்யமான சுற்றுலாத் தளமாகவும் கருதப்படும் அறுகம்பே பிரதேசத்தின் அழகினை, ஆகாயத்தில் இருந்து கொண்டு ரசிக்கும் வகையிலான புதுவித அனுபவத்தினை, மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா வழங்குவதாக, அம்பாறை மாவட்ட கைத்தொழில் மற்றும் சுற்றுலா சபையின் தலைவர் ஏ.எம். ஜௌபர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.

இந்த ஹெலி கொப்டர் சவாரியானது இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் இடம்பெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதொரு ஹெலிகொப்டர் சுற்றுலா நடத்தப்படுவது  இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 27 ஆம் திகதி உலக சுற்றுல தினமாகும். இதனை கொண்டாடும் வகையிலேயே மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நடத்தப்படுகின்றது.Tourism - 0001Tourism - 0004Tourism - 0006Tourism - 0003Tourism - 0005

Comments

புதிது பேஸ்புக் பக்கம்