அதிகம் பொய் சொல்வோர் ஆண்களா, பெண்களா: பதில் சொல்கிறது, நேர்மை பற்றிய ஆய்வு முடிவு

🕔 January 21, 2019

ண்கள் – பெண்களை விடவும் அதிகம் பொய் சொல்வதாக ஆய்வு முடிவொன்று கூறுகிறது.

நேர்மை குறித்த சமீப ஆய்வு ஒன்றில் இந்த முடிவு கிடைத்துள்ளது.

ஜெர்மனின் மேக்ஸ் பிளாங்க் மற்றும் இஸ்ரேலின் டெக்னியான் ஆகிய நிறுவனங்கள் 44,000 பேர் பங்கெடுத்த 565 ஆய்வுகளை அலசி இந்த முடிவுக்கு வந்துள்ளன.

அதற்காக, பொய் சொல்வதில் பெண்கள் ஒன்றும் சளைத்தவர் என்று அர்த்தம் இல்லை.

மேற்படி உளவியல் சோதனைகளில் பங்கெடுத்த ஆண்களில் 42 வீதமானோர், பொய் சொல்வது தெரிய வந்தது.

இந்த சோதனைகளில் பெண்களில் 38 வீதமானோர் பொய் சொல்கின்றனர் என்பதும் வெளிப்பட்டது.

மேலும், முதியவர்கள்தான் அதிகம் நேர்மையானவர்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

முதியவர்களை விடவும் இளைஞர்கள்தான் அதிகமாகப் பொய் பேசுகின்றனர் என்றும் மேற்படி ஆய்வு கூறுகின்றது.

மேலும், ஒருவர் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்பு ஆண்டு தோறும் 0.28 வீதம் அதிகரிக்கிறது எனவும் மேற்படி ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.

அதாவது, வயது ஆக – ஆக, நேர்மையும் அதிகரிக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்