கொழும்பிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றத் திட்டம்: எதற்காக என்பதை விளக்குகிறார் ஆஸாத் சாலி

🕔 January 20, 2019

பிச்சைக்காரர்கள் மூலம் கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

எனவே கொழும்பு நகரிலிருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறு அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாண ஆளுநர் ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்