மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தக் கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி

🕔 January 19, 2019

–  சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா –

னைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில், விரைவில் நடத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரும் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மாினத்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி,  செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நிராகரிக்கப்படாது என்கிற நம்பிக்கை உள்ளமையினால், அதன் பின்னர் மாகாண சபை தேர்தல் ஒன்றுக்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏற்கனவே ஆறு மாகாணசபைகளின் ஆயுட்காலம் முடிந்து அங்கு ஆளுநரின் ஆட்சி நடைபெறுகின்றன. தென் மாகாணசபையின் ஆயுட்காலம் ஏப்ரல் 10 ஆம் திகதியும், மேல் மாகாணசபையின் ஆயுட்காலம் ஏப்ரல் 21 ஆம் திகதியும், ஊவா மாகாணசபையின் ஆயுட்காலம் செப்டெம்பர் 08 ஆம் திகதியும் முடிகின்றன.

முன்கூட்டியே அவற்றை கலைத்து,  அனைத்து சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றே ஜனாதிபதி அமைச்சரவையில் கோரவுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் ஒன்றினை நடத்தி அதில் அமோக வெற்றி கிடைத்தால், அடுத்து உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே மைத்திரியின் இலக்கென்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்