இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

🕔 January 14, 2019

– இர்பான் முகைதீன் –

றக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

குறித்த வீதியை அகலமாக்குவதற்கு, வீதி அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ள போதும், அதனை செயற்படுத்துவதற்கு பிரதேச சபையின் தவிசாளர் மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்படி கவன ஈர்ப்பு நடவடிக்கையினை அடுத்து, வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர், உரிய இடத்துக்கு வந்து வீதியினை அளவையிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயினும், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர் இவ்விடயத்தில் பக்க சார்பாக நடந்து கொண்டார் என்றும், அதனை தான் கண்டிப்பதாகவும், கவன ஈர்ப்பு நடவடிக்கையை தலைமை தாங்கிய சமீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வீதியை அகலப்படுத்துவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்தப் பகுதி, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளரின் சொந்த வட்டாரம் என்பது குிறப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்