உப்புக்குளம் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தை, அமைச்சர் றிசாட் திறந்து வைத்தார்

🕔 January 11, 2019
ன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்தில் மீள்குடியேற்றத்துக்கென நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதியை இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின்  UAE AID – Emirates Red Crescent தொண்டு நிறுவனத்தினூடாக, இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக தனவந்தர்கள் மற்றும் தொண்டு நிறவனத்தின் உயரதிகாரிகள் பங்கேற்புடன்  இந்த வீட்டுத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.

‘சைத் சிட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வீட்டுத்திட்டத்தில் சுமார் 120 வீடுகள், கடைத்தொகுதி, மாநாட்டு மண்டபம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மன்னார், முசலி, மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்