கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

🕔 January 4, 2019

– அபூ அத்னான் –

“கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது.

உண்மையில், குறித்த கருத்தினை அவருடைய கருத்தாக மட்டும் பார்ப்பதற்கு முடியாது. கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வசிக்கும் பல சகோதரர்கள் அதே கருத்தைக் கொண்டிருப்பதனை பல தடவை அனுபவ ரீதியாக அறிந்திருக்கிறோம். இந்த மனநிலை அற்ற நல்ல சகோதரர்களும் இல்லாமலில்லை.

இருப்பினும், கிழக்கு மக்களை அவமானப்படுத்தி, அந்த நபர் வீசிய நச்சுக் கருத்துக்கள் மனதில் ஆழப் பதிந்து போயின. இன்று இலங்கையில் பலர் கொண்டாடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர், தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் ஒரு கிழக்கு மாதாவின் நிகரற்ற ஆளுமைதான்.

இந்த சூழ்நிலையில், கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருக்கின்றமை, கிழக்கு மாதாவின் ஆளுமைகளின் வெளிப்பாடாகும். ஆளுநர் பதவி மிக உயர் அந்தஸ்துள்ளதாகும். அரசியலமைப்பின் பிரகாரம் ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாவார்.

ஆக, கிழக்கு மண் – ஆளுமைகளும் தலைமைகளும் நிறைந்த ஓர் வளமான பிரதேசம் என்பது, மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டு வரும் உண்மையாகும்.

இந்தப் பதிவு ஓர் பிரதேசவாதப் பதிவல்ல. மாறாக, ஓர் புரிதலுக்கான கருத்துப் பதிவாகும்.

ஆக, எல்லாப் பிரதேசங்களி லும் ஆளுமைகள் இருப்பது போல் கிழக்கிலும் இருக்கிறார்கள் என்பது புரிதலுடன் ஏற்கப்பட வேண்டும்.

கிழக்கினை நலினப்படுத்தும் சிந்தனைகள் – வெற்றும் வெறிதுமாக வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்