அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாக தரமுயர்த்துவேன்: ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வாக்குறுதி

🕔 December 31, 2018
– அகமட் எஸ். முகைடீன் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.

தேசிய வாசிப்பு மாத விழா – நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்த இந்த  விழாவில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ஹரீஸ்  இந்த வாக்குறுதியை வழங்கினார்.

மேலும், “திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டுக்குத் தேவையான இயந்திரங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பெற்றுத் தருவேன்” என்றும் அமைச்சர் அங்கு கூறினார்.

இதன்போது அட்டாளைச்சேனை நூலகம் – புதிய கட்டடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்து தர முடியுமெனவும், இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நாட்டின் சகல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

இதன்போது  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி பரிசளிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்