தேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு

🕔 December 18, 2018

மைச்சுப் பதவிகளை பங்கிடுவதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.

ஒருபுறம் அமைச்சரவைக்கு 30 பேரை மட்டும் நியமிக்க வேண்டியிருப்பதாகவும், அதில் யாருக்கு என்ன அமைச்சுக்களை வழங்குவது என்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆளுங் கட்சிக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது; அமைச்சர்களின் தொகையை 30க்குள் வைத்துக்கொள்வதற்கு தான் தடுமாறுவதாகவும், யாராயினும் சுயமாக முன்வந்து அமைச்சுப் பதவிகளை பெறாமல் இருக்க முடியுமா என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவசியமானால், தான் அமைச்சு பதவியை ஏற்காதிருக்கிறேன் என்று மனோ கணேசன் கூறியதாகவும், அதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் அவ்வாறு அமைச்சுப் பதவியை ஏற்காதிருப்பதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் மனோ கணேசன் ‘பேஸ்புக்’ பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்