ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு

🕔 December 15, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது, இன்று சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரின் மருமகன் எம்.என். பார்ஸான் என்பவரே, தன்னைத் தாக்கியதாக, பொலிஸ் முறைப்பாட்டில் ஹமீட் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில், ஊடகவியலாளர் ஹமீட் தனது வீடு நோக்கி மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த போது வழிமறித்த பர்ஸான் என்பவர்,  தன்னைத் தாக்கியதாக ஹமீட் தனது முறைப்பாட்டில் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஹமீட் மீது தாக்குதல் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அதே பகுதிலுள்ள பவாஸ் எனும் இளைஞர் மீதும், மேற்படி பர்ஸான் என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞரும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, சிகிச்சைகளுக்காக அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் பவாஸ் ஆகியோர், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ‘புதிது’ செய்தித்தளத்திடம் விவரித்தனர்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்