பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

🕔 September 19, 2015

Karatte - 011
– எஸ். அஷ்ரப்கான் –

பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.

இந்தியாவின் தலைநகரான  புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

54 நாடுகள் பங்கு பற்றும் இப்போட்டியின் இன்றைய நிகழ்சிகளில், இலங்கை வீரர்கள் தங்களது முழுதிறமைகளையும் வெளிக்காட்டி 02 தங்கப் பதக்கங்களையும், 03 வௌ்ளிப்பதக்கங்களையும், 14 வெண்கலப் பதக்கங்களையும் என, மொத்தமாக 19 பதக்கங்களை தமது நாட்டுக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.

காட்டா, கும்டா, குமிட், டீம் காட்டா, டீம் குமிட் ஆகிய நிகழ்சிகளுக்காக கடெற், கனிஷ்ட, சிரேஷ்டபிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

நேற்று 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமான இச்சுற்றுப்போட்டியானது, நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறுகிறது.Karatte - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்