அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

🕔 December 13, 2018

– மரைக்கார் –

ட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை என்றும், சிலவேளை தப்பிக்க விடுவதாகவும் பொதுமக்கள் ‘புதிது’ செய்தித் தளத்திடம் முறையிட்டனர்.

அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்களே இவ்வாறு சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸார் பாராபட்சமின்றிய நடவடிக்கை மேற்கொள் வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையினை சிலர் சட்ட விரோதமாக வேலியிட்டு அபகரித்து வரும் நிலையில், இன்னொருபுறம், கடற்கரை மணலை சிலர் திருட்டுத்தனமாக அகழ்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்